கிளிநொச்சி மருத்துவர் கண்டாவளை MOH Dr.Priyaanthini க்கு தொலைபேசியில் அச்சுறுத்தியவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை 03.02.2022 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன.
கிளிநொச்சியில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் கடந்த மாதம் கண் பரிசோதனைமேற்கொண்ட தனியார் கண் மருத்துவ நிறுவனம் ஒன்று 71 மாணவர்களுக்கு கண்பாதிப்பு உண்டு எனத் தெரிவித்து அவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள தங்களதுமருத்துவ நிலையத்திற்கு மேலதிக பரிசோதனைக்காக வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களில் சந்தேகம் எழுப்பட்ட நிலையில் நடவடிக்கையில் இறங்கிய சுகாதார பிரிவினர் அம்மாணவர்களை கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் உள்ள கண் வைத்திய நிபுணரிடம் பரிசோதிக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கண்டாவளை M.O.H பிரிவு இப்போதுதான் புத்துணர்வு பெற்று எழுந்துகொண்டிருக்கிறது அதற்கு காரணம் இப்போது அங்கு MOH ஆக பணிக்கு வந்துள்ள Dr. Priyaanthini Kamalasingam அவர் துணிச்சலாக மருத்துவத்துறைக்குள் நடக்கும் ஊழல்களை ஒத்துழைப்பின்மையை பொதுவெளியில் பகிர்ந்து வருகிறார்.
ஒரே நாளில் ஒரு கிராமத்தை சேர்ந்த 300 க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கண்ணில் குறைபாடு உள்ளது அவர்கள் கண்ணாடி பாவிக்க வேண்டும் என ஒரு பாடசாலை அதிபர் ஊடாக மாபெரும் மருத்துவ கொள்ளையில் ஈடுபட இருந்த நபர்களை இனம்காட்டி அந்த சம்பவத்தை தடுத்து நிறுத்தியும் இருந்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து Dr. Priyaanthini Kamalasingam தொலைபேசியில் சில மர்மநபர்கள் மிரட்டல் விடுத்திருந்த நிலையில் அது குறித்து அதேவேளை வைத்தியர் தனக்கு கொலை மிரட்டல்விடுக்கப்பட்டதாக தர்மபுரம் போலீசில் முறையிட்டிருந்தமைமை குறிப்பிடத்தக்கது.