கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தின் மலசல கூடத்தின் கழிவு நீர் பயணிகள் பயன்படுத்தும் வெளி இடங்களில் வெளியேறி நிற்பதனால் பயணிகள் கடும் அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில்,புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய பேருந்து நிலையம் கடந்த 28.03.2023 அன்று திறந்து வைக்கப்பட்டது.
அழகாக பசுமையாக காட்சியளித்த குறித்த பேருந்து நிலையம் தற்போது அசிங்கமாக மாறிவருகிறது.
திறந்து வைக்கப்பட்டு ஐந்து மாதங்களில் இந்த நிலை என்றால்…?
1) பொது மக்களின் பொறுப்பற்ற செயல், பேருந்து நிலையத்தின் பல இடங்களில் வெற்றிலை எச்சில் சிவப்பு பெயின் பூசியது போல் காணப்படுறது. சிறிதும் கூச்சம் இன்றி மாடு சாணி போட்டது போல் துப்பிவிட்டு செல்கிறது. சில பேருந்து சாரதிகள் பேருந்தில் இருந்த படியே வெற்றிலை வாயை கொப்பளித்து துப்புகின்றனர்.
2) மலசல கூடத்தை பயன்படுத்த தெரியாத பயன்படுத்த தெரியா பயணிகள் சிலரின் நடவடிக்கைகள். அதற்குள்ளும் வெற்றிலை எச்சிலும், பீடித்துண்டுகளும்.
3) உரிய பராமரிப்பு இல்லை.பராமரிப்பு பணிகளில் ஈடுப்படுகின்றவர்கள் வெறுமனே கடமைக்கு பணியை செய்துவிட்டு செல்கின்றனர்.
4.) நீர் வசதி இருந்தும் நட்ட மரங்களுக்கு கூட நீர் ஊற்றாத நிர்வாகம். பச்சை மரங்களாக நின்ற இரண்டு மரங்கள் ஏற்கனவே பட்டமரங்களாக மாறியதனால் அவை வெட்டப்பட்டுவிட்டன.
இப்பொழுது மறு பக்கம் இரண்டு மரங்கள் செத்துக்கொண்டிருக்கின்றன. எனவே பொறுப்பு வாய்ந்த நிர்வாகத்தினர் இதனை கவனத்தில் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து முகநூலில் குறித்த தகவலை மு.தமிழ்ச்செல்வன் என்பவர் பதிவிட்டுள்ளார்.