கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சுமார் மூன்று வருடங்களுக்கு மேலாக இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும், இதனால் வீதிகள், விவசாய நிலங்கள் என்பன பாதிப்புக்குள்ளாகியுள்ளது எனவும் தெரிவிக்கும் கிராம மக்கள் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படும் கனரக வாகனங்களின் அதிகரித்த பயன்பாட்டினால் வீதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொது மக்கள் அவசர தேவைகளின் பொருட்டு பயன்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அன்மையில் தீடிரென கடும் நோய்வாய்ப்பட்ட முதியவர் ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு அவசர நோயாளர் காவு வண்டிக்கு அழைப்பு விடுத்து நோயாளர் காவு வண்டியும் பெரியகுளம் பிரதேசத்திற்கு சென்ற போதும் குறித்த பகுதிக்கு வீதியின் மோசமான நிலைமை காரணமாக செல்ல முடியாது நிலையில் உறவினர்களால் குறித்த முதியவர் நோயாளர் காவு வண்டி இருக்கும் இடம் நோக்கி தூக்கி வரப்பட்ட போது அவர் இடையில் மரணமடைந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது என பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.