கிளிநொச்சி – பரந்தன் புகையிரத நிலைய ஊழியர்கள் குண்டர்களின் தாக்குதலால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை பரந்தன் ரயில் நிலையப் பகுதியில் மது அருந்திய குழுவினரிடம், அப்பகுதியில் மது அருந்த வேண்டாம் என ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த குண்டர் கும்பல் பரந்தன் ரயில் நிலைய ஊழியர்களைத் தாக்கி காயப்படுத்தியதுடன் ரயில் நிலைய சொத்துக்களையும் சேதப்படுத்தியது.
இந்த நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசேட பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த சம்பவத்தில் ரயில் நிலைய மாஸ்டர் உட்பட இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.