கிளிநொச்சி உள்ள பாடசாலை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த மின் உபகரணங்கள் திருடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த திருட்டு சம்பவம் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரமந்தனாறு மகாவித்தியாலயத்திலேயே இடம்பெற்றுள்ளது.
குறித்த பாடசாலையில் கடந்த 1ஆ,ம் திகதி புதிய கட்டடத் தொகுதி ஒன்று திறந்து வைக்கப்பட்டது.
குறித்த கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் இணைப்புக்கள், இரண்டு மின் விசிறிகளும் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
திறப்பு விழாவின்போது, மண்டபத்துக்குரிய திறப்புகள் கதவின் கோர்வையாக கதவிலே தொங்கவிடப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து திருடப்பட்ட இரண்டு சாவிகளைக் கொண்டே திறந்து திருடப்பட்டுள்ளது.
சுமார் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான மின் இணைப்புகள் பொருத்தப்பட்டிருந்த நிலையில், இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
கடந்த மூன்று நாட்கள் பாடசாலைகள் விடுமுறை தினமாகையால், இன்றைய தினமே கற்றல் செயல்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.
திருட்டுச் சம்பவம் நடைபெற்ற விடயம் தெரியவந்ததை அடுத்து சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்கு விரைந்த தருமபுரம் பொலிஸார் ஆராய்ந்ததுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.