கிளி/ கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் பெண் அதிபர், மாணவி ஒருவரை தான அடித்ததை நியாயப்படுத்தும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் பெண் அதிபர் பாடசாலை மாணவி ஒருவரி தாக்கியுள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை , அதிபரிடம் சம்பவம் தொடர்பில் வினாவியுள்ளார்.
மரியாதைக் குறைவாக பேசிய பெண் அதிபர்
இதன்போது மாணவியின் தந்தையை மரியாதைக் குறைவாக பேசிய பெண் அதிபர் தான் செய்ததை நியாப்படுத்தி வாதாடுகின்ற காணொளி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பெற்றோரிடம் மரியாதையாக பேச தெரியத ஒரு அதிபர் , மாணவர்களிடம் எப்படி நடதுகொள்வார் என சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

