கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் கத்தியால் வெட்டப்பட்ட நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் நேற்று (25) மாலை அதே கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த வேளை இனந்தெரியாத நபர் ஒருவரால் கத்தி வெட்டுக்கு இலக்காகி உள்ளார்.
காயத்திற்குள்ளான இளைஞன் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் யாழ் போதனா வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டி மூலமாக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பளை முல்லையடி சேர்ந்த பால்ராஐ் துஷாந்தன் என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இன்று (26) குறித்த இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்டதாக பளையச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் பளை பொலிஸ் நிலையத்தில் சரண்டைந்துள்ளதாகவும் தனிப்பட்ட தகராறு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.