கிளிநொச்சியில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊற்றுக்குளம் பகுதியிலேயே இச் சம்பம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பொலிஸாரினால் அச் சந்தேகநபர் நேற்று (18) கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்
உருத்திரபுரம் சிவநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பினரிடையே இடம்பெற்ற மோதல் வலுவடைந்த நிலையில் கடந்த 25 ஆம் திகதி இந்த கொலைச் சம்பவம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை தொடர்பில் இரு சந்தேகநபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.