கால்நடை வைத்தியர்களுக்கான தனியான யாப்பை அரசாங்கம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட, அதனை தடுக்கும் முயற்சியில் விவசாய அமைச்சர் ஈடுபடுவதாக தெரிவித்து அரச கால்நடை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று காலை 6 மணி முதல் 24 மணிநேர போராட்டமாக முன்னெடுக்கப்படுகிறது.
இதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி, கண்டாவளை நான்கு கால்நடை வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் கால்நடை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக கால்நடை வைத்திய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

