கிளிநொச்சியில் அரசாங்க காட்டுக்குள் அனுமதியின்றி நுழைந்த குற்றச்சாட்டில் 5 பேரை இராமநாதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இராமநாதபுரம் – கல்மடு காட்டுப் பகுதிக்குள் அனுமதியின்றி உள் நுழைந்து மரங்களை வெட்டி 2 உழவு இயந்திரங்களில் ஏற்ற முற்பட்ட 5 இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அவர்கள் வெட்டிய மரங்கள் அனைத்தும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.