இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 300 ஓட்டங்கள் எடுத்துள்ளது.சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்த இந்திய அணி, இரண்டாவது டெஸ்டில் அதே சென்னை மைதானத்தில் பழிதீர்க்கும் முனைப்போடு களமிறங்கியது.
இந்திய பிளேயிங் லெவன்: ரோகித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட் கோஹ்லி, ரகானே, ரிஷப் பண்ட், அக்சர் படேல் (அறிமுகம்), அஸ்வின், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ்.
இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், நதீம், பும்ராவுக்கு பதிலாக அக்சர் படேல், முகமது சிராஜ், குல்தீப் யாதவ் இடம்பிடித்துள்ளனர்
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ரோரி பர்ன்ஸ், டோம் சிப்லி, டான் லாரன்ஸ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஒல்லி போப், பென் போக்ஸ், மொயின் அலி, ஜேக் லீச், ஸ்டூவர்ட் பிராட், ஒல்லி ஸ்டோன்.
பிப்ரவரி 13 இன்று சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்கிய இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்டில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ரோகித் சர்மா சதத்தால் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 300 ஓட்டங்கள் எடுத்தது.