நோய்களால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேல்மாகாணத்தில் நேற்று (10) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுமென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
1906 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புக்கொண்டு, இதற்கான பதிவுகளை மேற்கொள்ள முடியுமெனவும், நாட்டின் மொத்த சனத்தொகை 21 மில்லியனாகும். இதில் 110 இலட்சம் பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசியேற்றும் விசேட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாகவும், பல்வேறு காரணங்களைக் காட்டி இதுவரை கணிசமானோர் தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.
கிராம உத்தியோகத்தர்கள் வீடுகளுக்குச் சென்று கொரோனா தடுப்பூசி ஏற்றிக் கொண்டமை தொடர்பான தகவல்களையும் பெற்றுக் கொள்ள உள்ளார்களெனவும் கூறியுள்ளார்.