கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் லயன் தொடர் குடியிருப்பொன்றின் பின்னால் இருந்த 9 அடி ஆழமான கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த மீட்பு சம்பவம் நேற்று (02-05-2022) நுவரெலியா மாவட்டம் – தலவாக்கலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான (50 வயது) வேலு ராஜரட்ணம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் நேற்று முன்தினம் (01-05-2022) இரவு வெளியே சென்று வீடு திரும்பாத நிலையில், வீட்டார் அவரை தேடியிருந்தனர்.
அதன்போது வீட்டுக்கு பின்னால் இருந்த 9 அடி ஆழமான கிணற்றில் சடலமாக மிதப்பதை கண்டு தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
தவவலயறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டு சட்ட வைத்திய அதிகாரியின் மரண பரிசோதனைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்