ஒரு நாளில் மிகவும் ‘ஆன்ம ரீதியாக உகந்த’ நேரமாக இந்நேரத்தை பழமை விரும்பிகள் கருதுகின்றனர். பெரும்பாலும் காலை நேரத்தை பலர் சூரிய நமஸ்காரம் செய்து தொடங்குவர். அவ்வகையில் இன்றைய காலை பொழுதை கடற்சிங்கம் ஒன்று சூரிய நமஸ்காரம் செய்து ஆரம்பிக்கின்றது. இந்த செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தை பதிவிட்டுள்ளார். இது குறித்து கேப்சனில் சூரிய நமஸ்கார் என குறிப்பிட்டுள்ளார்.
கடற்சிங்கம் (Sea lion) என்பது கடற்பாலூட்டி வகையைச் சேர்ந்த குடும்பம் ஆகும். இவை இரண்டு சிறிய வெளிக் காதுகள், துடுப்பு போன்ற நீண்ட நான்கு கால்கள், தடித்த மேல் தோல், அடர்த்தியான சிறிய முடிகள் மற்றும் கொழுப்பு நிறைந்த அடர்ந்த உடலும் கொண்ட ஊனுண்ணிகளாகும். துடுப்பு போன்ற கால்களால் கடற்சிங்கங்கள் கடல் நீரில் நன்கு நீந்த இயலும். கடல் மீன்கள், மெல்லுடலிகள் மற்றும் நண்டுகள் ஆகியன கடற்சிங்கத்தின் முக்கிய இரைகளாகும்.
கடற்சிங்கங்கள் வட துருவம் மற்றும் தென் துருவக் கடற்கரைகளிலும், வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலிலும் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா, தெற்கு நியூசிலாந்து கடற்கரைகளிலும் காணப்படுகிறது. இவற்றின் வாழ்நாள் 20-30 ஆண்டுகளாகும்.
ஆண் கடற்சிங்கத்தின் அதிகபட்ச எடை 300 கிலோ கிராமும் நீளம் 8 அடியும் ஆகும். பெண் கடற்சிங்கத்தின் அதிக பட்ச எடை 100 கிலோ கிராமும், நீளம் 6 அடியும் ஆகும். ஸ்டெல்லர் வகை கடல் சிங்கத்தின் எடை 1000 கி கி., மற்றும் நீளம் 10 அடியாக உள்ளது. கடற்சிங்கங்கள் ஒரே நேரத்தில் தன் உடல் எடையில் 5-8% (15–35 lb (6.8–15.9 kg)) வரையிலான உணவை உண்ணக்கூடியது.
Surya Namaskar🙏
(DM for credit) pic.twitter.com/779ykKfFub— Susanta Nanda IFS (@susantananda3) July 25, 2021