கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
தமிழ் – சிங்கள புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில் எவரும் வீடுகளுக்கு செல்லாது ஆர்ப்பாட்ட இடத்திலேயே கொண்டாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆறாவது நாளாக தொடரும் இன்றைய தினம் முஸ்லிம்கள் மக்கள் பலகாரங்கள் செய்து ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியில் ஈடுபட்டனர்.
மூவின மக்களும் ஒன்றாக இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான இவர்களின் செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.