நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து அரசாங்கத்தை பதவி விலகுமாறு காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டிர்ருக்கின்றது.
இந்நிலையில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி தொடர்ந்தும் அங்கு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் நேற்றையதினம் இலங்கை இராணுவத்தால் மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியாவுக்கு நீதி கோரிய பாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
சோபனா தர்மராஜா என்னும் இயற்பெயர் கொண்ட இசைப்பிரியா தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத்துறையில் பணியாற்றியவர் ஆவார்.
ஈழப்போரின் முடிவில் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்தார். 2010 ஆம் ஆண்டில் இவர் கொலை செய்யப்பட்ட படங்கள் ஊடகங்களில் வெளியாகின இலங்கை இராணுவத்தால் மிககொடூரமான முறையில் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.