காலி – மாத்தறை பிரதான வீதியின் மிதிகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் வெளிநாட்டவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த வெளிநாட்டு பிரஜைகள் இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.