காலிமுகத்திடல் போராட்டக்காரரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்றையதினம் (11) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலையை நிரந்தரமாக வசிப்பிடமாகவும், மத்தேகொட பிரதேசத்தில் உள்ள வீடமைப்புத் தொகுதியில் தற்காலிகமாக வசிப்பிடமாகவும் கொண்ட 43 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
, கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.