அமெரிக்காவின் காற்றுத் தரக் குறியீட்டின்படி இலங்கையில் இன்று காலை 10 மணி வரை நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் 100 முதல் 150 வரை உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையின் முக்கிய மாவட்ட நகர் புறங்களின் காற்றின் தரம் பின்வருமாறு…
பதுளை 151, கேகாலை 137, கொழும்பு 126, யாழ்ப்பாணம் 106, குருநாகல் 94, கண்டி 91, காலி 74, புத்தளம் 89 என பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது