கொழும்பு ராஜகிரிய பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
லொறி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இராஜகிரிய மேம்பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் காயமடைந்த 50 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பத்தரமுல்லையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி, பொரளையில் பகுதியில் இருந்து நாவலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.
விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து வீதியில் சென்று கொண்டிருந்த காரில் பொருத்தப்பட்டிருந்த கெமராவில் இவ்வாறு பதிவாகியுள்ளது.