அம்பாறை, கல்முனை காவல் துறை பிரிவுக்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள், சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்கியிருந்த நிலையில், மாயமான சிறுமி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல்போன 16 வயதுச் சிறுமியே இவ்வாறு , நேற்றிரவு கல்முனை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி பலரால் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு, வழக்கு விசாரணையின் பின்னர் பாதுகாப்புக்காக நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் பெண்கள், சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் கடந்த ஒரு வருடமாக தங்கவைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் திடீரென மாயமான சிறுமி பொலிஸாரின் தீவிர தேடுதல் நடவடிக்கையின் போது, , வாழைச்சேனை பகுதியில் சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மீட்கப்பட்ட சிறுமி, கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரணையின் பின்னர் உரிய தரப்பினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.
அதேவேளை சிறுமி தனது வாக்குமூலத்தில் தனது விருப்பத்தின் பேரில் காப்பகத்தில் இருந்து தப்பி சென்றதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.