காதல் விவகாரத்தால் பாடசாலை மாணவனொருவன், இரண்டு மாணவர்கள் மீது கத்தியால் குத்திய சம்பவம் மாத்தளையில் இடம்பெற்றுள்ளது.
மாத்தளை சிறுவர் பூங்காவுக்கு அருலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் தாகுதலை மேற்கொண்ட மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கற்கும் மாணவர்கள் இருவர் மீது வேறொரு பாடசாலை மாணவன் தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.
தாக்குதலில் கழுத்து, தலை என்பவற்றில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில், காயமடைந்த மாணவர்கள் இருவரும் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவியொருவர் மீதான காதல் விவகாரமே இச்சம்பவத்துக்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மாணவன், மாத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்