மாத்தளை – இரத்தோட்டை, நிக்லோயாவத்த பிரதேசத்தில் காதல் விவகாரத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை இன்றைய தினம் (18-10-2023) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் தாக்கப்பட்ட நபர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தில் 39 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் வசிக்கும் 05 சந்தேக நபர்களை ரத்தோட்டை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் மகளுடன் ஏற்பட்ட காதல் காரணமாக தகராறு ஏற்பட்டு இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.