கடுகன்னாவ, ரத்மிவல பிரதேசத்தில் நேற்று பெண் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ரத்மிவல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணுடன் காதல் உறவில் ஈடுபட்ட ஆண் ஒருவரே அவரை கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் கடுகன்னாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.