காதலிக்கு வேறு நபருடன் திருமணம் இடம்பெறவிருந்த நிலையில் , திருமண நாளன்று காதனல் துப்பாக்கியால் சுட்டு யுவதியை கொலை செய்த சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருகையில்,
இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் மதுரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு திடீரென இன்று வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற இருந்தது.
இது குறித்து அறிந்த அந்த இளைஞர் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த இளைஞர், திருமண நிகழ்ச்சிக்கு துப்பாக்கியுடன் சென்றுள்ளார்.
திருமண விழாவில் சடங்கு ஒன்று நிறைவுற்ற நிலையில் மணமகள், ஆயத்தமாவதற்கு அவரது அறைக்கு சென்றுள்ளார். இதன்போது யுவதியை பின் தொடர்ந்த காதலன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காதலியை சரமாரியாக சுட்டதில் சம்பவ இடத்திலேயே மணமகள் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கு மணமகள் சுடப்பட்டு உயிர்ழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சம்பவம் தொடபில் பொலிஸார் விசாரணைகளை மேற்ஒண்டுள்ள நிலையில் திருமணநாளில் மணப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.