சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடளாவிய ரீதியில் மக்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில் பாலூட்டும் போட்டியில் தனது பழைய காதலிக்கு பாலூட்டி முதலிடம் பெற்ற தனது கணவரை பெண் வீட்டைவிட்டு துரதிய சம்பவம் ஒன்று பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
புது வருட கொண்டாட்டத்தினை முன்னிட்டு கேகாலையில் கேளிக்கை நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தது.
இதன்போது இடம்பெற்ற விளையாட்டில் பாலூட்டும் போட்டி ஒன்றும் இடம்பெற்றுள்ளது. அந்த போட்டியில் பெண்ணின் கணவர் தனது முன்னாள காதலிக்கு பாலூட்டி போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஆத்திரமடைந்த அவரது மனைவி கணவரை வீட்டை விட்டு துரத்தியதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கிளு கிளுப்பான புது வருட விளையாட்டு குடும்பம் ஒன்று பிரிவதற்கு காரணமாகியுள்ளது.