காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை கையாள்வதில் இலங்கையின் முன்னேற்றம் இல்லாதது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் குழு கடுமையான கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கையின் காணாமல் போனோர் அலுவலகத்தின் (OMP) செயல்திறனும் இதில் அடங்கும்.
குறித்த அலுவலகம் காணாமல் போனோர் தொடர்பான 17,000 முறைப்பாடுகளில் ஒரு பகுதியை மட்டுமே கண்டறிந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
செவ்வாய்க்கிழமை (07) வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் குழு (UNCED), கட்டாயமாக காணாமல் போனதாகக் கூறப்படும் விசாரணை, வழக்குத் தொடுப்பதில் முன்னேற்றம் இல்லாதது அதிக அளவிலான தண்டனை விலக்கு செயல் என்றும் குறிப்பிட்டது.
இலங்கை மீதான மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் (OHCHR) அதிகாரத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு (UNHRC) திங்களன்று நிறைவேற்றிய ஒரு நாளுக்குப் பின்னர் UNCEDவின் இந்த அறிக்கை வந்துள்ளது.