மடுல்சீம பகுதியில் உள்ள உலக முடிவில் காணாமல்போன ஊடகவியலாளர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
தனியார் ஊடக நிறுவனமொன்றில் பணியாற்றும் நபர் ஒருவர்
கடந்த சனிக்கிழமை மருத்துவர்கள் குழுவுடன் மடுல்சீமையில் உள்ள பிட்டமாருவ உலக முடிவிற்கு சென்றிருந்த வேளை காணாமல்போயிருந்தார்.
இதனையடுத்து அவரைமீட்கும் பணியில் படையினர் ஈடுபடுத்தப்பட்டதாக இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் 200 அடி செங்குத்துப்பாறையில் கயிறுகளை பயன்படுத்தி படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் காணாமல்போன ஊடகவியலாளர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.