காட்டு யானைகள் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் அம்பன்பொல பகுதியில் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்த இருவர்
நிகவலயாய பிரதேசத்தில் வசிக்கும் 57 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, எஹெதுவெவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதலில் உயிரிழந்தவர் கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தற்போது கல்கமுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் எஹெதுவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

