மன்னார் தள்ளாடி இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று மாலை 6.30 மணியளவில் மடுக்கரை காட்டுப்பகுதியில் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மன்னார் தள்ளாடி இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் பொலிஸாருடன் இணைந்து மடுக்கரை கட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கி வேட்டைக்கு பயன்படுத்துவது என தெரிய வந்துள்ளது. இந்நிலையில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.