களுத்துறையில் விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து விழுந்து 16 வயதுடைய பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் மற்றும் இளம் தம்பதிகள் எதிர்வரும் ஜூலை மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் நேற்று (07.07.2023) களுத்துறை பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் மற்றும் அவரது நண்பன், நண்பனின் காதலி ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
களுத்துறையில் உள்ள விடுதி ஒன்றுக்கு அருகாமையில் ரயில் பாதையில் மர்மமான முறையில் 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
நாகொட பிரதேசத்தினை வசிப்பிடமாக கொண்ட 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.
குறித்த மாணவி மேலும் இரு இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவருடன் 06.05.2023 அன்று பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வந்திருந்த நிலையில், பின்னர் மாடியிலிருந்து குதித்து சடலமாக மீட்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.