களுத்துறையில், கார் ஒன்றில் கொலை முயற்சிக்காக வாள்கள் மற்றும் துப்பாக்கிகளை கொண்டு சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 28 தோட்டாக்கள், 2 வாள்கள், 2 கைக்குண்டுகள், 11 கிராம் ஹெரோயின், துப்பாக்கி, கார் என்பன களுத்துறை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தின் போது, 46 மற்றும் 29 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸார் கூறியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேகநபரின் வீட்டில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் மேலும் 5 வாள்கள், 2 துப்பாக்கிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.