களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.
களனி பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கண்டி நோக்கிச் செல்லும் அனைத்து போக்குவரத்தும் தடைப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.