கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
மட்டக்குளி புனித ஜோன்ஸ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
2022 உயர் தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகளில் ஏற்பட்டுள்ள கால தாமதத்தினால் அடுத்த முறைக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் ஒத்தி வைக்கப்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.
உலக அளவில் தொற்றுநோயால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள் கல்வியைப் பாதிக்கும் போராட்டங்களுக்குத் தாம் ஆதரவளிக்கப்போவதில்லை என்றும் அவர் இதன்போது மேலும் கூறினார்.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சருடன் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி -சங் (Julie Chung) கலந்துகொண்டார்.
ஏற்கனவே மே மாதம் அளவில் சாதாரண தர பரீட்சை நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், இது மேலும் தாமதமடைவதற்கான சாத்திய கூறுகள் தற்போது உருவாகியுள்ளது.