பாடசாலை மாணவர்களை கல்வி சுற்றுலாவிற்கு ஏற்றிச் சென்ற பேருந்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்ப்பட்டுள்ளது.
அம் மாணவன் ஜன்னலுக்கு வெளியே தலையை வைத்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருமஸ்ஸால மலையை நோக்கி செல்லும் வீதியில் நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்தின் பின் இருக்கையில் பயணித்த மாணவன் ஜன்னலுக்கு வெளியே தலையை வைத்ததால், மின்கம்பத்தில் தலை மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்த மாணவர் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உடுபத்தாவ, குளியாபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபராதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.