கல்பிட்டி இரணைதீவுக்கு அருகில் இந்தியாவில் இருந்து கடல் வழியாக படகொன்றில் கொண்டு வரப்பட்ட போதை மாத்திரைகளுடன் இருவர் கல்பிட்டி கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நுரைச்சோலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த படகில் இருந்து சுமார் 15 கோடி ரூபாய் பெறுமதியான 5 இலட்சத்து 70 ஆயிரம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த போதை மாத்திரைகள் 10 பெட்டிகளில் பொதிகளாக வைக்கப்பட்டிருந்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் கல்பிட்டி கடற்படை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.