கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடல் பகுதியில் நேற்று (01) காலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 04 கிலோ 454 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த கடத்தில் முயற்சியின் போது இரண்டு சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்ததுடன், ஒரு டிங்கி படகையும் கைப்பற்றப்பட்டனர்.
கடல் வழிகளில் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க, நாட்டைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்பரப்பை உள்ளடக்கிய வகையில் கடற்படை வழக்கமான ரோந்து மற்றும் தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்த கடத்தல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் கைதான சந்தேக நபர்கள் கற்பிட்டி ஏலத் தோட்டம் மற்றும் ஆனவாசலை பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், சந்தேக நபர்கள், தங்கம் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.