கறிவேப்பிலை என்பது நாம் தினமும் சமைக்கக்கூடிய பலவிதமான உணவுப் பொருட்களிலும் சேர்ப்பது வழக்கம். ஆனால் பெரும்பாலானோர் அதனை வாசனைக்கு மட்டுமே சேர்த்துக்கொள்கின்றோம்.
அதனால் கறிவேப்பிலையை தூக்கி ஓரமாக வைத்துவிடுவோம். நம்மில் பலரும் அதனை உண்பது இல்லை. ஆனால் , கறிவேப்பிலை நம் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மைகளை தரக்கூடியது.
கறிவேப்பிலையால் கிடைக்கும் நன்மைகள்
எடை குறைப்பு
தற்போது பெரும்பாலான மக்கள் தங்கள் எடையைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறார்கள். அதிகரித்து வரும் எடையைக் குறைக்க மக்கள் பல டயட் முறைகளை பின்பற்றி வருகின்றனர்.
ஆனால், உணவின் சுவையை அதிகரிக்கும் கறிவேப்பிலை, உடல் எடையைக் குறைக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . இதில் உள்ள நார்ச்சத்து, உடலில் தேங்கியுள்ள கூடுதல் கொழுப்பு மற்றும் நச்சுகளை அகற்ற உதவுகிறது.
நீரிழிவு நோய்
இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோய் ஒரு பொதுவான வியாதியாக மாறிவிட்டது. அதில் நீங்களும் ஒருவராக இருந்தால் கண்டிப்பாக கறிவேப்பிலை சாப்பிடுங்கள்.
இதில் உள்ள நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உடலில் இருக்கும் இன்சுலினை பாதித்து இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.
செரிமான பிரச்சனை
அடிக்கடி செரிமான பிரச்சனையால் தொல்லையடைந்தால், கறிவேப்பிலை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு கறிவேப்பிலையை அரைத்து மோரில் கலந்து குடித்தால் செரிமான பிரச்சனை நீங்கும்.
இதன் பயன்பாடு வயிற்றை குளிர்ச்சியாக வைப்பது மட்டுமின்றி, செரிமானக் கோளாறுகளையும் குணப்படுத்தும்.
இதய நோய்
உணவை சுவையாக மாற்றும் கறிவேப்பிலை, இரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் குணம் இருப்பதால், இதய நோய்களிலிருந்து பாதுகாக்கவும் இது மிகவும் உதவியாக இருக்கும்.
கறிவேப்பிலை உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது, இதன் காரணமாக இதயம் தொடர்பான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
தோல் பிரச்சனை
தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கும் கறிவேப்பிலை மிகவும் உதவியாக இருக்கும். நீண்ட காலமாக பருக்கள் அல்லது முகத்தின் வறட்சி பிரச்சனையால் சிரமப்பட்டு இருந்தால், தினமும் கறிவேப்பிலையை சாப்பிடுவது நன்மை பயக்கும்.
கறிவேப்பிலையில் ஃபேஸ் பேக் செய்து முகத்தில் தடவுவதும் நல்ல பலனைத் தரும் என்றும் சொல்லப்படுகின்றது.