பிரசவத்திற்காக காத்திருந்துக்கும் மனைவியை விட்டுவிட்டு 15 வயது பாடசாலை மாணவியொடு ஓடிய பாண் வியாபாரியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இரத்தினபுரி பகுதியில் நடமாடும் பாண் வர்த்தகம் செய்து வந்த 29 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பாண் வியாபாரத்தின்போதே 15 வயது பாடசாலை மாணவியுடன் காதல் வசப்பட்டுள்ளார்.
இருவரும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிச் சென்று. மினுவாங்கொடையில் வாடகை வீட்டில் தங்கியிருந்து குடும்பம் நடத்தி வந்த போது, குடும்பஸ்தர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.