இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
எரிபொருள் பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பெற்றுக்கொள்கின்றனர்.
இந்நிலையில் கர்ப்பிணி தாயாரை ஏற்றிச்செல்லும் முச்சக்கரவண்டியொன்று எரிபொருளின்றி நிறுவிட்டது.
அப்போது அங்கு வந்த பொலிஸ் அதிகாரி அவரது இருசக்கர வாகனத்திலிருந்து போத்தலின் மூலம் எரிபொருளை பெற்று முச்சக்கர வண்டியின் சாரதியிடம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த அதிகாரியின் செயலுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.