கடந்த 6 மாதங்களுடன் ஒப்பிடுகையில் கருவாட்டு வகைகளின் விலை 35% முதல் 40% வரை குறைந்துள்ளதாக கருவாட்டு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பிரதித் தலைவர் ஆர்.ஜி. வில்சன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உலர் மீன்களின் கையிருப்பு உரிய முறையில் பெறப்பட்டமை உள்ளிட்ட பல காரணிகளால் கருவாடுகளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.