விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்து கிழக்கை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த காலகட்டத்தில், கருணாவின் இருப்பிடம் மீது ஒரு அதிரடித் தாக்குதலை மேற்கொள்ளும் நோக்கில் ஒரு இரகசிய அணி களமிறக்கப்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகளின் தலைவரது பிரத்தியேகப் பாதுகாப்பு பிரிவில் ‘சைபர் பிரிவு’ என்ற பெயரில் அழைக்கப்பட்ட ஒரு விசேட கொமாண்டோ அணியை அவர் களமிறக்கியிருந்தார்.
கருணாவின் முக்கிய தளமாக மருதம் தளத்திற்குள் அதிரடியாக நுழைந்து கருணாவை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்கும் நோக்கத்தில், கரும்புலிகளையும் உள்ளடக்கிய அந்த விசேட அணி புலிகளின் தலைவரது நேரடி கண்காணிப்பின்கீழ் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்திருந்தது.
விக்டர் கவச எதிர்ப்பு படையணியின் தளபதியும், புலிகளின் தலைவரது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், கிழக்கைச் சேர்ந்தவருமான ‘அக்பர்’ என்ற தளபதியின் தலைமையில் அந்த அணி களமிறங்கியிருந்தது.
இந்தச் சம்பவம் உட்பட, கருணாவின் பிரிவு காலத்தில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களைச் சுமந்து வருகின்றது