கருணா தனது 55வது பிறந்த நாளை கடந்த ஞாயிற்றுக் கிழமை (07.11.2021) புதிதாக திருமணம் முடித்த மனைவியுடன் மிகச் சிறப்பாக கொண்டாடியுள்ளார்.
இதே வேளை கருணாவின் முதல் மனைவி நிரா மற்றும் பிள்ளைகள் முகநுால் வழியாக தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப்புலிகள் கட்டமைப்பில் இருந்து கருணா பிரிந்த பின்னர் அரசியல் ரீதியான செயற்பாடுகளில் அரசுடன் இணைந்த செயற்பட்டு வரும் சூழலில் அவரின் முதல் மனைவி நிரா மற்றும் பிள்ளைகள் பிரித்தானியாவில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் கருணாாவின் முதல் மனைவி நிரா மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தமை குறிப்பிடத் தக்கது.
இதே வேளை விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிவதற்கு முன்னர் இருந்த போராளிகளிகளின் புகைப் படங்களை கருணாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் போது குடும்பத்தார் குறித்த புகைப்படங்களை பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத் தக்கது.