திருகோணமலை – கன்னியா பகுதியிலுள்ள முஸ்லிம் மக்களின் பூர்வீக இடங்கள் மற்றும் அப்பகுதியில் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்தௌபீக் இன்று(16) அப்பகுதியிலுள்ள மக்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
யுத்தம் காரணமாக 1987 காலப்பகுதிகளில் கன்னியா கிராமத்திலிருந்து வெளியேறிய மக்கள் பாரிய சவால்களுக்கு பின் படிப்படியாகக் குடியேறி வருகின்றனர்.
இந்நிலையில் அதற்கான சகல வேலைத் திட்டங்களும் திருகோணமலை வலீத் ஹாஜியாரின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விரைவில் இடம்பெயர்ந்த அனைவரையும் மீள் குடியேற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.