கனடாவில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 இலங்கையர்கள் உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் கனடா தலைநகர் ஒட்டாவாவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த சம்பவத்தில் இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தாய் மற்றும் பிள்ளைகள் உயிரிழந்துள்ளதுடன் தந்தை பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்தனர்.