கனடா தலைநகர் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்களை கொலை செய்த சந்தேகநபர், மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என கனடா ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் மனநல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் ஒட்டாவா நகரில் 6 இலங்கையர்களை கொலை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 19 வயதுடைய இலங்கை மாணவனை ஒட்டாவா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
குறித்த நீதிமன்றில் அவர் சுமார் 4 நிமிடங்கள் மாத்திரமே முன்னிலைப்படுத்தப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது சந்தேகநபரிடம் அவரது பெயர் மற்றும் பிறந்த திகதி என்பன தொடர்பில் வினவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் 28ஆம் திகதி முன்னெடுப்பதற்கான கோரிக்கை அவரது சட்டத்தரணியூடாக முன்வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சந்தேகநபருக்கு பிணை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சந்தேகநபரின் மனநலம் தொடர்பில், ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதன்படி, அவரின் மனநிலை தொடர்பான அறிக்கையை கனடாவின் ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் மனநல நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.
இதற்கமைய, குறித்த சந்தேகநபரால் செய்யப்பட்ட கொலைகளின் தன்மைகளுக்கு ஏற்ப அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.