கனடாவில் இருந்த போது சந்தித்த பெண்ணை மீண்டும் சந்திப்பதற்காக யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் இருந்து மாங்குளத்திற்கு சென்ற பெண்ணின் சகோதரகளால் நையபுடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த 13ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட மாங்குளம் பொலிஸார் பெண்ணையும் தாக்குதலில் ஈடுபட்ட நபரையும் கைது செய்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தாக்குதலுக்குள்ளானவர் 48 வயதானவ்ர் என்றும், திருமணமாகி அவருக்கு பிள்ளைகள் இருப்பதாகவும் , கனடாவில் சில காலமாக வேலை பார்த்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டிற்கு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கனடாவில் இருந்தபோது, மாங்குளம் பனிச்சங்குளத்தைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவருடன் குறித்த நபருக்கு தொடர்பு இருந்த நிலையில், அப் பெண்ணுக்கும் திருமணமாகி குழந்தைகள் இருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.
பெண்ணின் சகோதரர் உள்ளிட்ட நால்வர் கொண்ட குழுவே இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பெண்ணின் சகோதரரும் ஏனைய குழுவினரும் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு உள்ளான நபர் பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன், தன்னிடம் இருந்த 50,000 ரூபா, 300 கனேடிய டொலர்கள் மற்றும் தனது கையடக்கத் தொலைபேசியையும் தாக்குதல் நடத்தியவர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.