கனடாவில் இந்தியர்கள் மீதான இனக்குரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோ மாகாணம் வாட்டார்லூ பகுதியைச் சேர்ந்த அஸ்வின் அண்ணாமலை என்பவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட அஸ்வினை இந்தியாவிற்கே சென்று விடுமாறு அச்சுறுத்தப்பட்டதாக அவர் தெரிவிக்கின்றார்.
இது தொடர்பில் அவர் காணவில்லை பெண் ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி இந்தியாவிற்கே சென்று விடுமாறு தம்மை அச்சுறுத்தியதாக அஸ்வின் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கைகளைக் கொண்டு சைகைகளினாலும் வார்த்தைகளாலும் குறித்த பெண் மிக இழிவான முறையில் தம்மை நடத்தியதாக அவர் குறிப்பிடுகின்றார்.
அண்ணாமலை ஒரு கனடிய பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியர்கள் அதிக அளவு கனடாவில் இருப்பதாகவும் அவர்கள் நாடு திரும்ப வேண்டும் எனவும் குறித்த பெண் எச்சரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அன்னைய மாதங்களாக தாமும் தமது நண்பர்களும் அதிக அளவான இனக்ரோத சம்பவங்களை எதிர் நோக்க நேரிட்டுள்ளதாக அஸ்வின் தெரிவிக்கின்றார்.
தாம் இவ்வாறு அச்சுறுத்தலுக்கு உள்ளானமை குறித்த காணொளி வெளியிட்டதனை தொடர்ந்து பலர் அஸ்வின் அண்ணாமலைக்கு ஆதரவினை வெளியிட்டு வருகின்றனர்.