கந்தளாயில் இளம் தாயார் ஒருவருக்கு பாம்பு தீண்டியதில், அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம், இன்று ஞாயிற்றுக்கிழமை (16-01-2022) திருகோணமலை – கந்தளாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து, அவரை உடனடியாக கந்தளாய் தள வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் 24 வயதுடைய தாயொருவருக்கே பாம்பு தீண்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பேராறு பகுதியில் தனது வீட்டு வளவினை துப்பரவு பணிகளை செய்த வேளை பாம்பு தீண்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும், எந்தவகை பாம்பு தீண்டியது என்பது சரியாக தெரியாது எனவும் கால்கள் வீங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்