2022 பீஃபா கால்பந்து உலக கோப்பையின் வெற்றிக் கிண்ணத்தோடு அர்ஜென்டினா நாடு திரும்பிவிடும், கொண்டாட்டங்களும் ஆரவாரங்களும் இன்னும் சில நாட்களில் அடங்கிவிடும்.
ஆனால், உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டின் வரலாற்றில் இவரது பெயர் மட்டும் தங்க லிபிகளால் ஜொலித்துக்கொண்டே இருக்கும்.
யாராலும் யாருக்கும் எவ்வித இடையூறும் இல்லாத, அசம்பாவிதங்கள் ஏதுமின்றி, யாரும் கைது செய்யப்படாத, அனைவரையும் அன்போடும் முகமலர்ச்சியோடும் வரவேற்று உபசரித்து, வந்தவர் அனைவரும் மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் நாடு திரும்பிச் செல்ல காரணமாக இருந்த உலகக் கோப்பையின் ஒப்பற்ற ஒருங்கிணைப்பாளர்!
ஆம்! இனவாதம் மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராக அன்பையும் ஒருமைப்பாட்டையும் நிலைநாட்டியதன் மூலம் இந்த உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் நிஜமாகவே கோல் அடித்து வரலாற்றில் இடம்பிடித்தவர்!
அதுவும் ஒட்டுமொத்த மேற்கத்திய உலகம் தொடங்கி இங்குள்ள துக்கடா ஊடகங்களின் கேலி கிண்டல் பரிகாசம், வெறுப்புப் பிரச்சாரம் அனைத்தையும் பொய்யாக்கி… எதிரிகளின் இதயங்களையும் வென்றவர்!
இந்த உலகக் கோப்பையின் உண்மையான நட்சத்திரம் இவர்தான்! கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி உலக கோப்பையை வென்றது, அர்ஜென்டினா உலகத்தையே வென்றது, கத்தார் மற்றும் கத்தார் அமீர்!